Sunday, May 16, 2010

0 ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் கம்ப்யூட்டர்!ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் கம்ப்யூட்டர்!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் டேப்ளட் கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. ஆப்பிள் நிறுவன தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் சான்ஃபிரான்சிஸ்கோவில் இதை அறிமுகப்படுத்தினார்.

பார்ப்பதற்கு சற்று பெரிய ஐபாட் மாதிரி தெரியும் இந்த கம்ப்யூட்டர், வெறும் 1.25 செ.மீ அடர்த்தி கொண்டது. 680 கிராம் எடையுடன், 24.3 செ.மீ கிளாஸ் டச் ஸ்கீரினுடன் காட்சியளிக்கிறது ஆப்பிள் ஐபேட்.

இ-புக், பிரவுசிங், வீடியோ காட்சிகளை துல்லியமான, தெளிவான தரத்துடன் பார்பதற்கு மிக ஏற்றவகையில் இந்த ஐபேட் உள்ளது.

இதன் விலை ரூ.23,250 முதல் ரூ. 38,600 வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More...

0 பிடித்த பாடலை பாடி அதை வைத்து கண்டுபிடித்து டவுன் லோடு செய்யலாம்

நமக்கு பிடித்த பாடலை எங்கேயோ கேட்டு இருப்போம் அது எந்த படம் போன்ற விபரங்கள் தெரியாது , அதனை கண்டறிந்து download போடவேண்டும்.

இதை எளிமையாக்க நாம் அந்த பாடலை பாடினால் அதன் மூலம் கண்டறிந்து பெறமுடியும் . நாம் குறைந்தது பத்து வினாடிகள் பாடினால் போதும்.

எப்படி என்று பார்ப்போம் முதலில் www.midomi.com இதை கிளிக் செய்து அந்த இணைய தளம் செல்லுங்கள் அங்குள்ள பட்டன் கிளிக் செய்து மைக்ரோ போன் தேர்வை ஓகே செய்து பாடுங்கள் பிறகு stop button கிளிக் செய்து விடுங்கள் போதும் . இந்த இணையதளம் நீங்கள் பாடியதை வைத்தே தேடி உங்களுக்கு தேவையான பாடலின் முழு விபரமும் கொடுத்துவிடும் .

தமிழ் பாடல்களை விட மேற்கத்திய பாடல்கள் மிக சரியாக கிடைக்கும் . முயன்று பாருங்கள் .

Read More...

0 ஐ-போன் vs நோக்கியா - எது பெஸ்ட்?


செல்வந்தர்களுக்காகவே மின்னணு சாதனங்களை தயாரித்து தரும் நிறுவனங்களில் ஒன்று அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம்.ஆமாம் இந்த நிறுவனம் தயாரித்து தரும் சாதனங்கள் எல்லாமே பணக்காரர்களால் மட்டுமே வாங்கமுடியும். அந்த அளவுக்கு விலை அதிகமாக இருக்கும் .

பணக்காரர்களும் தங்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து உள்ளவர்களாக காட்டிக்கொள்ள பணத்தை தண்ணியாக செலவு செய்து இந்நிறுவன பொருள்களை வாங்கி உபயோகிப்பார்கள். இந்த நிறுவனம் தயாரித்து தரும் சாதனங்களில் அதிகமான வசதிகள் இருக்கிறதோ இல்லையோ? கண்டிப்பாக வடிவமைப்பு அபாரமாக இருக்கும். அதில்தான் எல்லோரும் மயங்கி விடுவார்கள். அந்த மயக்கத்தில் அந்த தயாரிப்பில் கொடுக்கின்ற காசுக்கு இல்லாத சிலவசதிகள் வாங்குவோருக்கு பெரிதாக தெரியாது.அது தான் ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றியின் ரகசியம்.


பொதுவாக நாம் பணம் கொடுத்து வாங்குகின்ற சாதனங்களில் கொடுக்கின்ற பணத்திற்கு உள்ள வசதிகள் உள்ளனவா? என்று பார்த்து வாங்க வேண்டும்.ஆனால் பெரும்பாலானோர் அப்படி செய்வதில்லை.வாடிக்கையாளர்களின் இந்த மனநிலையை ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன.


கம்ப்யூட்டர், ஐபாட் போன்ற சாதனங்களை தயாரித்து வழங்கி வரும் ஆப்பிள் நிறுவனம் செல்போன் சந்தையிலும் இறங்க 'ஐபோன்' என்ற தனது தயாரிப்பை களம் இறக்கியது. 16GB நினைவகம் கொண்ட போனின் விலை 39,000 விலைக்கும், 8GB நினைவகம் கொண்ட போன் 37,000 என்ற விலைக்கும் அறிமுகப்படுத்தியது.


ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் பல வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினார்கள், சிலபேர் ஷோரூம்களுக்கு முன்னாள் இரவு முழுவதும் காத்துக்கிடந்து வாங்கினார்கள். தனது தயாரிப்புக்கு உள்ள அமோக ஆதரவை பார்த்த ஆப்பிள் நிறுவனம் விற்பனையை அதிகரிக்க இன்னொரு தந்திரம் செய்தது.


அதாவது உலகம் முழுக்க ஒரு நேரத்தில் சாதனத்தை விற்பனைக்கு விடாமல் குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் விற்பனை செய்தது.இதனால் அறிமுகப்படுத்தப்படாத மற்ற நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் அந்த போனை எப்படியாவது வாங்கி பயன்படுத்தி பார்த்து விடவேண்டும் என்ற பேராசையை வளர்ந்தது.இதனால் ஆப்பிள் ஐ போனின் விற்பனை சூடுபிடித்தது. ஆனால் அவ்வளவு பணம் கொடுத்து வாங்கிய போன் உண்மையிலேயே கொடுத்த பணத்திற்கு உரிய வசதிகளை இருக்கின்றனவா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.


'ஐபோன்' ஒரு கையால் தொட்டு இயக்கப்படும் (touch screen) போன் என்பதால் அந்த நிறுவனத்தோடு போட்டிபோட மற்ற நிறுவனங்களும் தங்கள் சார்பில் தொட்டு இயக்கும் போன்களை அறிமுகப்படுத்தியது.


இதில் நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்திய 5800xpressmusic என்ற மாடல் நோக்கியாவின் கையால் தொட்டு இயக்கம் முதல் போன் என்பதால் அந்த மாடலுக்கும், ஐபோனுக்கும் பலத்த போட்டி நிலவியது. செல்போன் விற்பனையில் தாத்தாவான நோக்கியா நிறுவனம் தனது மாடலில் ஆப்பிள் ஐபோனால் தர முடியாத பல வசதிகளை உட்புகுத்தி அறிமுகப்படுத்தியது.


அதில் முக்கியமானது போனின் விலை,ஆமாம் கொடுக்கின்ற காசுக்கு உரிய வசதிகளுடன் நோக்கியாவின் 5800 xpressmusic வெறும் இப்போது இந்தியாவில் வெறும் 13,500 என்ற விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்ட போது 19,800 என்ற அளவில் விலை இருந்தது குறிப்பிடத்தக்கது.


அப்படியானால் ஐபோனில் கொடுக்கின்ற காசுக்கு உரிய வசதிகள் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். கண்டிப்பாக இல்லை என்று சொல்லமுடியும். இங்கே ஐபோனுக்கும் நோக்கியா 5800xpressmusic போனுக்கும் உள்ள வசதிகளின் வேறுபாடுகளை பட்டியலிட்டுள்ளேன். படித்துவிட்டு நீங்களே எந்த போனை வாங்கலாம் என்று முடிவுசெய்து கொள்ளுங்கள்.


ஐபோனுக்கும், நோக்கியா 5800 xpressmusic போனுக்கும் உள்ள வசதி வித்தியாசங்கள் :


1. 1500 ரூபாய்க்கு விற்கப்படுகின்ற போன்களில் கூட F.M வசதி உள்ளது.ஆனால் ஐபோனில் இல்லை.நோக்கியா 5800 மாடலில் RDS வசதியுடன் F.M RADIO வசதி உள்ளது.


2. ஐபோனில் BLUTOOTH வசதி உள்ளது ஆனால் அதன் மூலம் பாடல்கள்,வீடியோ, ரிங்டோன் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது. நோக்கியாவில் இது தண்ணி பட்டபாடு .


3. ஐபோனில் கேமரா வசதி உள்ளது.ஆனால் அதில் VIDEO RECORDING செய்ய முடியாது .மூன்றாம் தரப்பு நிறுவனம் வழங்கும் அப்ளிகேஷனை பயன்படுத்திதான் இந்த வசதியை பெறமுடியும்.(ஆப்பிள் நிறுவனத்தின் APPLE 3GS என்ற புதிய மாடலில் மட்டுமே வீடியோ ரெக்கார்டிங் வசதி உள்ளது) நோக்கியாவில் இந்த வசதி இயற்கையாகவே உள்ளது.


4.நோக்கியாவில் எம்.பி 3 பாடல்களை,வீடியோ காட்சிகளை ரிங்டோனாக பயன்படுத்த முடியும், ஆனால் ஐபோனில் முன்பே பதியப்பட்ட ரிங்டோன்களை மட்டுமே பயன்படுத்தமுடியும்.அதே போல் ரிங்டோனின் சத்தமும் மிகக்குறைவாக இருக்கும்.



5.நோக்கியாவில் நீங்கள் தொடர்ந்து எட்டு மணி நேரங்கள் பேசலாம், அதன் STANDBY நேரம் 406 மணிநேரம், பாட்டரியை கழற்றி மாட்ட முடியும், ஆனால் ஐபோனில் தொடர்ந்து 5 மணிநேரம் மட்டுமே பேசமுடியும், அதன் STANDBY நேரம் 300 மணி நேரம் மட்டுமே, பாட்டரியை கழற்ற முடியாது.

6. நோக்கியாவில் ஸ்பீக்கர் ஒலி அளவு மிகச்சிறப்பாக உள்ளது. ஆனால் ஐபோனில் குறைந்த அளவே கேட்கிறது.எம்.பி 3 பாடல்களை ஹெட் போன் இணைத்தால் மட்டுமே நல்ல ஒலி அளவில் கேட்க முடியும்.


7. நோக்கியாவில் DUAL LED FLASH' உள்ளது,ஆனால் ஆப்பிள் ஐபோனில் FLASH கிடையாது.


8.ஐபோனின் எடை 133 கிராம், நோக்கியாவின் எடை 109 கிராம்


9. நோக்கியாவில் 3.2 MEGAPIXELS கேமரா உள்ளது. ஐபோனில் 2MEGAPIXELS மட்டுமே.

(ஆப்பிள் நிறுவனத்தின் APPLE 3GS என்ற புதிய மாடலில் மட்டுமே 3 MEGAPIXELS கேமரா உள்ளது)

10.ஐபோனின் திரை அளவு 3.5" INCH, நோக்கியாவின் திரை அளவு 3.2" INCH நோக்கியாவின் SCREEN RESOLUTION 640*360 என்ற அளவில் உள்ளது, ஆனால் ஐபோனில் SCREE RESOLUTION 480*320 மட்டுமே


11.நோக்கியாவில் வீடியோ கால் செய்யும் வசதி உள்ளது,ஐபோனில் இந்த வசதி இல்லை, 3G வசதி இரண்டு போன்களிலும் உள்ளது.நோக்கியாவை நம் வீட்டு 'டிவி' யுடன் இணைக்கமுடியும், ஐபோனில் அந்தவசதி இல்லை,அதேபோல் ஐபோனில் VOICE DIALING வசதியும் இல்லை.


12. ஆப்பிள் ஐபோனில் பாடல்களை பணம் கொடுத்து மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும், ஆனால் நோக்கியாவில் ஒரு வருடத்திற்கு இலவசமாக பாடல்களை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.


13.நோக்கியா சிம்பியன் O.S வகையை சார்ந்தது, இதன் மூலம் ஏராளமான மேம்படுத்தப்பட்ட வசதிகளை தொடர்ந்து பெறமுடியும், ஆனால் ஐபோன் அதன் தனிப்பட்ட MAC O.S வகையை சார்ந்தது,


14. எல்லாவற்றுக்கும் மேலாக நோக்கியா எக்ஸ்பிரஸ் மியூசிக் போனின் விலை இந்தியாவில் இப்போது 13,500மட்டுமே, ஆனால் ஐபோனின் விலை இப்போதும் இந்தியாவில் 30,000 ரூபாய்.


இப்போது நீங்களே சொல்லுங்கள் ஐ-போனை விட நோக்கியா பெஸ்டா இல்லையா..?
Read More...

0 வீடியோக்களை வெட்ட இலவச video cutter....

இந்த மென்பொருளை பின்வரும் லிங்கில் சென்று தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இந்த மென்பொருளில் எந்த வீடியோவையும் ஓபன் செய்து கொண்டு சிலைடர்கள் மூலம் தேவைப்படும் பகுதியின் ஆரம்ப நிலையையும், இறுதி நிலையையும் தேர்வு செய்து கொண்டு, Save Video மூலம் உங்களுக்கு தேவையான வீடியோ பகுதியை பெற்று கொள்ளுங்கள்.


இதன் மூலம் உங்கள் வீடியோவை MPEG4, DivX, MP3, FLV, WMV Format -களில் பெற முடியும். குறிப்பிட்ட வீடியோவில் உள்ள ஆடியோ பகுதியை மட்டும் பிரித்தெடுத்து MP3 யாக சேமித்து கொள்ள முடியும்.











Read More...

0 மென்பொருளை புதுப்பிக்க ஒரு மென்பொருள்?

நாம் பயன்படுத்தும் கணினி வேகமாக இயங்குவதற்கு அந்த கணினியில் நாம் நிறுவி பயன்படுத்தும் மென்பொருட்களும் ஒரு காரணம்.அதற்கு நாம் நம் கணினியில் உள்ள மென்பொருட்களை அவ்வபோது புதுப்பித்துக்கொண்டால் நம் கணினியின் வேகம் சீராக இருக்கும்.

ஆனால் நம்மில் பெரும்பாலானோர் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. இதனால் புதுப்பிக்கப்படாத மென்பொருட்களை பயன்படுத்தினால் நம் கணினியின் வேகம் குறைய ஆரம்பித்து விடும்.

இதற்கு தீர்வாக அமைகிறது FILEHIPPO என்ற மென்பொருள்

இந்த மென்பொருளை நமது கணினியில் நிறுவிக்கொண்டால் நாம் நமது கணினியில் நிறுவியுள்ள மென்பொருட்களுக்கு புதிதாக மேம்படுத்தப்பட்ட பதிப்புகள் வந்தால் அதை நமக்கு காட்டி கொடுக்கும். அதை நாம் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதனால் நமது கணினி இயங்கும் வேகம் குறைவது தவிர்க்கப்படும்.மேலும் FILE HIPPO மென்பொருள் வெறும் 246KB என்ற குறைந்த அளவில் இருப்பதால் கணினியில் அதை நிறுவி பயன்படுத்துவதும் மிக எளிது.

FILEHIPPO மென்பொருளை இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

........................................................................................................................Download As PDF
Read More...

0 மிகச்சிறந்த இலவச ஆன்டி-வைரஸ்

ணம் கொடுத்து 'ஆன்டி-வைரஸ்' வாங்க முடியாத வாடிக்கையாளர்கள் தங்களுடைய மென்பொருட்களை பயன்படுத்தியாவது பார்க்கட்டுமே என்ற எண்ணத்தில் வழங்கப்படும் 'ஆன்டி-வைரஸ்' தான்"இலவச ஆன்டி-வைரஸ்".

இந்தவகை மென்பொருட்களில் பணம் கொடுத்து வாங்கும் ஆன்டி-வைரஸில் இருப்பதை விட கொஞ்சம் குறைவான பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்,சில வாடிக்கையாளர்கள் தங்கள் கணினுக்கு முழுமையான பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் பணம் கொடுத்தே ஆன்டி-வைரஸை வாங்கிக்கொள்வார்கள்.


ஆனால் என்னதான் பணம் கொடுத்து நாம் கணினியில் ஆன்டி-வைரஸ் போட்டுக் கொண்டாலும் புதுபுது வைரஸ்களின் அட்டகாசம் இன்றைக்கும் தாங்க முடியாததாகத்தான் உள்ளது.


குறிப்பாக நாம் இணையதளங்களில் உலவும்போது கண்டிப்பாக வைரைஸ்களின் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.அவை நாம் இணையதளங்களிருந்து ஏதாவது தரவிறக்கம் செய்யும்போது வைரஸும் அதன் கூடவே சேர்ந்து வந்து நம் கணினியில் உட்கார்ந்து கொள்ளும்.


இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் (வந்து கொஞ்ச நாள் ஆன) இலவச Microsoft Security Essentials என்ற மென்பொருள்.


பல கணினி உபயோகிப்பாளர்கள் பயன்படுத்தி பார்த்த வரையில் மிக அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் ஆன்டிவைரசாக Microsoft Security Essentials மென்பொருள் செயல்படுகிறது.குறிப்பாக இணையதளங்களில் நாம் உலவும்போது இந்த ஆண்டிவைரஸ் அதிகபட்ச இணைய பாதுகாப்பை நமக்கு தருகிறது.இந்த இலவச ஆன்டிவைரஸ்' நாம் பணம் கொடுத்து வாங்கும் ஆன்டிவைரஸ் தரும் அதிகபட்ச பாதுகாப்பை ஒத்த பாதுகாப்பை நமது கணினுக்கும் வழங்குகிறது.


அது மட்டுமல்லாமல் அதுவே தானாக அடிக்கடி தன்னை புதுப்பித்துக் கொள்வதால் நமது கணினிக்கு நல்ல பாதுகாப்பும் கிடைக்கிறது,இந்த ஆன்டிவைரஸை பயன்படுத்திப் பார்த்த பலபேர் இதன் செயல்திறனை வெகுவாக பாராட்டுகிறார்கள்.


நீங்களும் பயன்படுத்தி பார்க்க இந்த '
லிங்கை' கிளிக் செய்யவும்.

பின்குறிப்பு : இந்த மென்பொருள் ஒரிஜினல் விண்டோஸ் ஓ.எஸ்(windows o.s) களில் மட்டுமே வேலை செய்யும். ...................................................................................................................................................................
Download As PDF
Read More...

0 யாழ்நகர் மீனவக் குப்பத்தைச் சேர்ந்தவர் சுறா (விஜய்).

யாழ்நகர் மீனவக் குப்பத்தைச் சேர்ந்தவர் சுறா (விஜய்). இந்தக் குப்பத்தில் உள்ள 1500 குடும்பங்களும் சுறா செல்வதைக் கேட்டு அவன் பின்னால் வழி நடக்கின்றனர்.குடிசைப் போட்டு வாழும் அந்த மக்களுக்கு நல்ல வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பது சுறாவின் ஆசை, லட்சியம், கனவு எல்லாமே. அந்த லட்சியத்திற்கு குறுக்கே வந்து நிற்கிறார் அந்த இடத்தை அடையத் துடிக்கும் வில்லன். அந்த மக்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி அந்த இடத்தை வளைத்துப் போட நினைக்கும் அரசியல்வாதி தாதாவை சுறா எப்படி எதிர்கொள்கிறார் அதில் வெற்றி பெற்று அந்த மக்களுக்கு வீடு கட்டி கொடுத்தாரா என்பது க்ளைமேக்ஸ்.

ஒருவார காலமாக காணாமல் போன மீனவர்களை மீட்புக் குழுவினர் தேடுகிறார்கள். அவர்களின் முயற்சிக்குப் பின்னர் சுறாவைத் தவிர மற்ற மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கரை சேர்க்கப்படுகின்றனர். விஜய் மட்டும் நீச்சலடித்தே கரை சேர்கிறார். (ஹீரோவாச்சே… சும்மாவா…!!!) குப்பத்து கேரக்டரில் விஜய் நடிக்கத்தான் செய்திருக்கிறரே தவிர, அந்த கேரக்டர் அவருக்குள் இறங்க மறுத்திருப்பது நன்றாகவே தெரிகிறது. நன்றாக டேன்ஸ் ஆடுகிறார். மற்றபடி….

தமன்னாவின் அரைகுறை ஆடையைப் போலவே அவருக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரும். விஜய் தமன்னா காம்பினேஷன் காட்சிகளில் அநியாயத்துக்கு கடுப்பை உருவாக்குகிறார்கள். தற்கொலை செய்யப் போகும் தமன்னா மேக்அப் போடுவது அதற்கு அவர் சொல்லும் விளக்கம்.. ரொம்ப தான் யோசிக்கிறாங்கப்பூ… நடிப்பு… எக்ஸ்பிரஷன்ஸ்… ம்கூம்… இத்தனைக்கும் தமன்னா காட்டில் மழையாம்…

வடிவேலை வேஸ்ட் பண்ணியிருக்கிறார்கள். அவர் கஷ்டப்பட்டு நம்மை சிரிக்க வைக்கிறார். ஆனால் பாதி காட்சிகளில் கூட சிரிப்பு வரவில்லை. வெண்ணிற ஆடை மூர்த்தி, வடிவேலு வரும் அந்த காமடி துவக்கத்தில் ரசிக்கும்படி இருந்தாலும் முடிவில்… அய்யோடா.. என்று முடிகிறது. வில்லன் அடிக்கடி உறுமுகிறார். ஏகப்பட்ட பில்டப் குடுக்கிறார். அவரது லிப் மூவ்மென்ட் மேட்ச் ஆகலை. மார்க்கெட்டில் நடக்கின்ற அந்த சண்டைக்காட்சிகள் சூப்பர். ஆனால் அவ்வளவு நேரம் அந்த சண்டைக்காட்சி தேவையா…?

பாடல்கள் பின்னணி இசை ஓ.கே.தான். ஒண்ணுமே இல்லாத காட்சிகளை இடங்களைக் கூட பிரமாண்டமாகக் காட்டிய ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தின் நல்ல ஒளிப்பதிவு. சில வருடங்களுக்கு முன்பு கிராமத்து படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமாரின் மறு என்ட்ரிதான் இந்தப் படம்.

சென்னையில் அடிக்கடி நிகழும் சம்பவமான குடிசை தீ பிடித்தல், அதில் மக்கள் பாதிக்கப்படுதல், அவர்களை நகரத்தை விட்டு பல மைல் தூரத்திற்கு கொண்டு குடி இருத்தல்… எனும் விஷயத்தை கதையின் கருவாக எடுத்திருக்கிறார்கள். கவனிக்கப்பட்டு கொண்டாடப்பட வேண்டிய கதை. ஆனால் விஜய்க்காக கதையில் செய்த மாற்றங்களோலோ என்னமோ கதையை திரைக்கதையாக்கும் போது சின்னாபின்னமாக்கி சிதறடித்திருக்கிறார்கள். இல்லாவிட்டல் இந்தக் கதை தமிழ் சினிமாவில் இன்னொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

Read More...

0 Autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க ” Panda Usb Vaccine “

கணினிக்கு வருகிற வைரஸ்கள் எல்லாம் பென் டிரைவ் மூலம் அதனுள் உள்ள autorun.inf என்ற கோப்பை மாற்றி அதன் வழியாக பரவி விடுகின்றன. நீங்கள் ஏதேனும் ஆண்டிவைரஸ் போடவில்லை என்றால் அவ்வளவு தான். உட்கார்ந்து விடவேண்டியது தான். எனவே இந்த கோப்பை நீங்கள் முடக்குவதன் மூலம் கணினியை பாதுகாக்கலாம்.

பாண்டா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள மற்ற டிவைஸ்களின் தானியங்கும் செயலையும் முடக்கும். உதாரணமாக சிடி அல்லது டிவிடி டிவைஸ்கள். மேலும் autorun கோப்புகள் எங்கிருந்து செயல்பட்டாலும் முடக்கும்.கணினிக்கும் பாதுகாப்பை பலப்படுத்தும்.

அடுத்து பென் டிரைவ்கள், மெமரி கார்ட்கள் மற்ற Usb கருவிகள் எதை கணினியில் நுழைத்தாலும் அதை முடக்கிவிடும். நீங்கள் கணினியில் இதை முடக்க தேடிக்கொண்டிராமல் இந்த மென்பொருள் மூலம் கணினியை பாதுகாப்பாக வைத்திருங்கள். நன்றி.

Download செய்ய ……..


இதனை விட smart-virus-remover என்ற software ம் Pendrive , Memory ships (mobile , Digital Camera), களில் இருக்கின்ற autorun.inf களை Delete செய்து மேலும் virus மற்ற ஹர்ட் டிஸ்க் களிற்கு பரவ விடாமல் தடுக்கின்றது ..

Download செய்ய ……..

முயற்சி செய்து பார்த்து விட்டு கருத்துக் கூறுங்கள் ..

நன்றி

Read More...

0 மைகம்ப்யூட்டரில் உள்ள டிரைவ் கோலன்களை மறைக்க

ம்ப்யூட்டரில் பைலை மறைப்பது, போல்டர்களை மறைப்பது திரும்ப கொண்டு வருவது போன்ற நடைமுறை செயல்களை அன்றாடம் செய்து பார்த்திருப்பீர்கள். அதற்கும் மேலாக மைகம்ப்யூட்டரில் உள்ள ஹார்டு டிஸ்க் டிரைவ் கோலன்களை அதாவது C: (or) D: (or) E:... இப்படி கோலன்கள் இருக்குமேயானால் அவற்றில் ஏதாவது ஒரு கோலனனை எங்ஙனம் மறைப்பது என்றும், மேலும் CD-Drive Colon மற்றும் Floppy Drive Colon இடம் பெற்றிருந்தால் அவற்றை எப்படி மறைப்பது என்றும் அதுவும் மற்ற மென்பொருள் துணையில்லாமால் நம் கம்ப்யூட்டரில் புகுத்தியுள்ள ஓஎஸ்மூலம் எளிய வழியில் மறைப்பது எப்படி என்றும் பார்க்கலாம்.


முதலில் Start > Run - ல் diskpart என்று தட்டச்சு செய்து ஓகே கொடுக்கவும்.
படம்-1 யை பார்க்கவும்.





படம்-1



பின்னர் அங்கு தோற்றமளிக்கின்ற CUI மோடில் (அதாவது Dos WIndow)
DISKPART> என்று ஒரு விண்டோ காட்சியளிக்கும் அங்கு list Volumeஎன்று தட்டச்சு செய்யவும்.படம்2-யை பார்க்கவும்.



படம்-2



தட்டச்சு செய்து என்டர் தட்டியவுடன் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்டு டிஸ்க் டிரைவின் கோலன்களின் வரிசை காண்பிக்கப்படும். அந்த வரிசைகைகளில் C, D, E,F ... முறையே Volume 0,1,2 .. என்று அட்டவணை போல் காட்சியளிக்கும்.படம்3-யை பார்க்கவும்



படம்-3


அவற்றில்
எந்த கோலனை மறைக்க வேண்டுமோ அவற்றின் பெயரை அதாவது Volume நம்பரை 0 அல்லது 1 அல்லது 2 ... என்று கொடுக்கவும்.


சான்றாக E: கோலன் என்றால் நீங்கள் அந்த DISK - PART >ல் select volume 3 என்று கொடுக்கவும். படம் ௪-யை பார்க்கவும்.




படம்-4

அதன்
பின் என்டர் கி தட்டியவுடன் DISKPART> கோலன் வந்து நிற்கும். அங்கு remove E என்று செய்வதற்கு பதில் "remove"
(இரட்டை குறிக்குள்) என்று தட்டச்சு செய்து என்டர் கொடுக்கவும்
படம் 5-யை பார்க்கவும்.



படம்-5


மைகம்ப்யூட்டரில்
E:கோலன் மறைக்கப்பட்டிருக்கும்.

Remove
செய்தவுடன் ஒரு சில ஆப்பரேட்டிங் (விண்டோஸ் விஸ்ட்டா ) சிஸ்டங்ககள் Reboot ஆகும். சிஸ்டம் ரீபூட் (Reboot ) ஆகாவிட்டால் சரி நீங்கள் சிஸ்டத்தை ரீபூட் செய்து விடவும்.


நீங்கள் மறைத்துவைத்துள்ள E: கோலன் List volume ல் தெரியாது. ஆனால் அந்த வால்யும் வம்பருக்கு முன்பு ஒரு ஸ்டார் குறி பூட்டப்பட்டிருக்கும். அவற்றை பார்த்தே நாம் தெரிந்து கொள்ளலாம். E: கோலன் மறைக்கப்பட்டிருக்கின்றது என்று. இப்போது மறைத்து வைத்துள்ள கோலனை எவ்வாறு திரும்ப கொண்டு வருவது அனைவருக்கும் புதிராக இருக்கலாம். இது மிகவும் எளிது.

முதலில் Start> Run> diskpart, பிறகு List volume என்று தட்டச்சு செய்யவும். இனிமேல்தான் கவனம் தேவை . "remove" என்று தட்டச்சு செய்வதற்கு பதில் "assign" என்று கொடுக்க வேண்டும். இபோதுதான் E: கோலன் மைகம்ப்யூட்டரில் காட்சியளிக்கும். மறைக்கப்பட்ட கோலனை வந்த வழியிலும் எடுக்க இயலாது. இப்படி மறைப்பதனால் அதில் சேமித்து வைத்துள்ள தகவல்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது.

படம்-6

இதேபோல் தான் சிடி டிரைவ் கோலன் மற்றும் ஃப்ளாப்பி டிரைவ் கோலனுக்கும் மேற்சொன்ன வழிமுறையை பின்பற்றலாம். மறைத்த கோலனை எடுக்க ஒரு சிலர் டாஸ் ப்ராம்ப்டுக்கு போய் எடுக்க முயல்வர். ஒரு சிலர் Start> Run - ல் E: கோலன் என்று தட்டச்சு செய்து ஓகே கொடுப்பர்.



படம்-7



படம்-8

அவர்களுக்கு
Error Message தான் காட்சியளிக்கும். Diskpart கட்டளை Pendrive-க்கு பொருந்தாது . இந்த நுட்பத்தை விண்டோஸ் எக்ஸ்பீ மற்றும் விஸ்ட்டாவில் பயன்படுத்தி பயன் பெறலாம்.
Read More...

0 சுறா – இந்த அநியாயத்த தட்டிக்கேட்க யாருமே இல்லையா?

சில பேரு எடுத்து சொன்னா திருந்திருவாங்க!. சிலருக்கு பட்டாதான் புரியும். சில பேர் இருக்காங்க எருமைத்தோல் மாதிரி செறுப்பால அடிச்சு காரித்துப்பினாலும் திருந்தவே மாட்டாங்க! – யாருக்கு இந்த பஞ்ச் டயலாக்! விடை கடைசியில்

கதர்ர்றா!

முதலில் கதற கதற ஒரு கதை சொல்கிறேன்.
ஒரு ஊரில் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் ஏழைகள் இருந்தனர். அவர்கள் குடிசையில் இருந்தனர். ஏழைகளில் ஒரு ஏழைப்பங்களான் இருந்தான். மக்களுக்கு கக்கூஸ் வந்தாலும் அவன் துணை வேண்டும். அதே ஊரின் ஊரில் பணக்காரன் இருந்தான். அவனுக்கு ஹோட்டல் கட்ட இடம் கிடைக்காமல் குடிசைகளை அகற்ற வேண்டியிருந்தது. குடிசைக்கு தீ வைத்தான். நடுவில் காதலியோடு நாலு பாட்டு , அம்மாவோடு சென்டிமென்ட். மக்கள் கதறல் சோகம். ஏ.பங்களான் கோபப்பட்டான். வஞ்சகமாக பணக்காரனை ஏமாற்றி பணம் சம்பாதித்து ஏழைகளுக்கு கொடுத்தான். பின் மகிழ்ச்சியாக காதலியோடு டூயட் பாடினான். சுபம்.

பார்ர்றா!

தமிழ்சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் இந்த முற்போக்கு சிந்தனை நிரம்பிய கதை சுறா படத்தில் காணக்கிடைக்கிறது. விஜய்யின் மேன்மையான ஹீரோயிச நடிப்பும் அவர் பேசும் பஞ்ச் வசனங்களும் இதுவரை தமிழ்கூறும் சினிமா உலகம் கண்டிராதது. இது விஜயின் ஐம்பதாவது படமாம். 49 படங்களில் நடித்ததை விட இதில் பல மடங்கு கடுமையாக நடித்திருக்கிறார். பார்ப்பவர்கள் வாயில் விரலை வைத்துக்கொண்டு பார்க்கிறார்கள். விஜய் பஞ்ச் டயலாக் பேசுகிறார் . பேசுகிறார்.. பேசிக்கொண்டே இருக்கிறார்.. விட்டால் ஸ்கரீனிலிருந்து இறங்கி வந்து மடியில் அமர்ந்து பேசுவார் போலிருக்கு! பேசி முடித்ததும் கையை பின்புறம் கட்டிக்கொண்டு சுலோ மோஷனில் நடக்க.. நமக்கு இனிமா கொடுக்காமலேயே இனிமையான லூஸ் மோசன்!. டாக்டர் விஜயல்லவா! இந்த பையனுக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பார்ர்ரேன்.

வுட்ட்ட்றா!

படத்தில் இனிமையான காதல் காட்சிகள் உண்டு. தமன்னா தற்கொலைக்கு முயல்வதும் , அதை காமெடி என்ற பெயரில் விஜயும் வடிவேலுவும் தடுப்பதும்.. நமக்கே தற்கொலை செய்து செத்து செத்து விளையாட வேண்டும் என்கிற ஆவலை தூண்டுகிறது. அதிலும் கண் தெரியாதவர்களை ரோட் கிராஸ் பண்ண வைக்கும் விஜயைப் பார்த்து அப்படியே காதலில் விழுந்து இடுப்பில் நிக்காத பேண்டோடு தமன்னா ஆடுகிற ஆட்டம் உங்க வீட்டு ஆட்டமல்ல எங்க வீட்டு ஆட்டமல்ல,.. உலக ஆட்டம். படம் பார்க்கும் நமக்கே நாம ஒரு வேளை பைத்தியகார கூமுட்டையோ என்று தோன்று கிறது. அதே மாதிரி கூட ஆடும் பெண்கள் கறுப்பு ஜட்டியோடு ஆடுகின்றனர். லோ பட்ஜட் படம் போலிருக்கிறது. நடன சீகாமணிகளின் நடனம் மானாட மயிலாட ஜோடி நம்பர் ஒன்னு ராஜாயாரு ராணி ஆறுக்கு இணையாக இருக்கிறது. ஆனால் இதை பார்க்க காசு நிறைய செலவாகும்! காசுறா காசு!

அட்ட்ட்றா!

சுத்தி சுத்தி சண்டை போட்டாலும் உருட்டு கட்டையால் பொடணியில் அடித்தால் எப்பேர்பட்ட சூப்பர் மேனும் மயங்கிவிடுவான் என்பது உலக நியதி. விஜய் மண்டையில் அடித்து படுக்க வைத்து அவருக்கு ஆப்படிக்கின்றனர். இடைவேளை. மகதீரா வில்லன் மண்டைக்கு ரெண்டு சைடில் வெள்ளை சாயம் அடித்து வயதானவராக வந்தாலும் இளமையாக அழகாக இருக்கிறார். பாவம் அவர் என்ன செய்வாரு விஜய் பஞ்ச் பேச அவர் ஈ போகுமளவுக்கு பப்பரப்பாவென திறந்து கொண்டு நிற்கிறார் வாயை. விஜய் போனபின் ஏய்.. ஓய்.. என கதறுகிறார்.. வடிவேலு படம் முழுக்க வந்தாலும் வெண்ணிற ஆடையார் ஒரே காட்சியில் மொத்தமாக அள்ளுகிறார். மற்றபடி வடிவேலுவுக்கு வயசாகிருச்சு! இசை மணிசொர்மா.. பாட்டெல்லாம் படுமட்டம். ஓப்பனிங் நல்லாதான் இருக்கு பினிசிங்தான் ம்ஹூம். படத்தின் இயக்குனர் எஸ்.பி. ராஜ் குமார் விஜய ஏமாத்தினாரா இல்ல இவரு அவர ஏமாத்தினாரானு தெரில..

பஞ்சர்ரா!

எப்படி நடித்தாலும் படம் ஹிட்டாகிடும் என்கிற ஆணவமும் அகம்பாவமும் அதிகமா இருந்தா எப்பேர்பட்ட சூப்பர் ஸ்டார் படமும் படுத்துரும் என்பது குசேலபடிப்பினை. இதுவும் அதே கேட்டகிரியில் அடங்கும். மக்களை மாக்கான்களாக்கி அழகு பார்த்திருக்கிறார்கள் சன்பிக்சர்ஸ் மற்றும் சங்கிலிமுருகன் கூட்டணியினர்.. ஒருபக்கம் யதார்த்த வெறிபிடித்த கூட்டமொன்று ரத்தம் வழிய வழிய படமெடுத்து உயிரை வாங்குது.. இன்னொரு பக்கம் இப்படி மசாலா படமெடுக்கிறேனு கி.மு காலத்து கதையெல்லாம் எடுத்து பஞ்ச் பேசி ரத்தம் கக்க வைக்குது.. இந்த அநியாயத்த தட்டிக்கேக்க யாருமே இல்லையா!

சாம் ஆண்டர்சனின் யாருக்கு யாரோ, விஜய டீயாரின் வீராசாமி உங்களுக்கு பிடிக்குமா.. இந்த படமும் உங்களுக்கு மிகமிக பிடிக்கும்.. முழுமையான காமெடி கலாட்டா!. எனக்கு பிடித்திருந்தது… ரசித்து சிரித்தேன்.

சுர்ர்ர்றா!

முதலில் சொன்ன பஞ்ச் என்னோப்போல படம் பார்த்தவர்களுக்கும் , விஜய்க்கும் சன்பிக்சர்ஸ்க்கும் சமர்ப்பணம்!

சுறா – சம்பவாமி யுகே யுகே!

Read More...

Download This Template